வேதாகமம் உருவான கதை - பாகம் 6



Myles Coverdale மற்றும் John Rogers இருவரும் சேர்ந்து William Tyndale ன் கடைசி ஆறு ஆண்டு கால மொழி பெயர்ப்பு பணியினை நினைவில் கொண்டும் மார்டின் லூதரின் ஜெர்மானிய வேதாகமத்தையும், லத்தின் மொழி பெயர்ப்புகளையும் பயன்படுத்தி ஒரு முழுமையான ஆங்கில வேதாகமத்தை உருவாக்கி கி.பி 1535 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியிட்டனர். இந்த வேதாகமத்தின் பெயர் The Coverdale Bible.

John Rogers இவரை John "Thomas Matthew" Rogers என்றும் அழைப்பார்கள். Mathew-Tendale bible என்ற வேதாகமத்தின் ஆசிரியர் இவர் தான். இந்த வேதாகமம் தான் ஆங்கிலத்தில் வெளிவந்த இரண்டாம் வேதாகமம். இது தான் எபிரேயு கிரேக்க மூல பாஷைகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட முதல் வேதாகமம். William Tyndale உருவாக்கிய வேதாகமத்தின் முதல் ஐந்து ஆகமங்களையும் The Coverdale Bible யில் இருந்து பழைய ஏற்பாட்டின் கடைசி பகுதிகளான அப்போகரிபா (Apocrypha) பகுதிகளையும், கி.பி 1535 -ல் Tyndale உருவாக்கிய புதிய ஏற்பாட்டையும் சேர்த்து கி.பி 1537 ஆம் ஆண்டு ஒரு முழு ஆங்கில வேதாகமத்தை உருவாக்கி வெளியிட்டார். இதன் இரண்டாவது பதிப்பு கி.பி 1549 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

இந்த வேதாகமத்தை வெளியிடவும் அதனை படிக்கவும் Henry VIII உரிமை வழங்கினார். கி.பி 1550 ஆண்டு வரை எட்டாம் ஹென்றி அரசராக இருந்தார். இவரது ஆட்சியில் எல்லோராலும் சுதந்திரமாக செயல்பட முடிந்தது. அதன் பிறகு அவரது மகன் King Edward VI ஆட்சிக்கு வந்தார். இவர் பெந்தகோஸ்தே சபையை (Protestantism)  ஆதரித்ததால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இவரது ஆட்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. இவர் உடல் நல குறைவால் இறந்து போனதால் 19 ஜுலை 1553 ஆம் ஆண்டு இவரது தங்கை இராணி மேரி (Queen Mary) ஆட்சிக்கு வந்தார். ரோம கத்தொலிக்க (Roman Catholic)  திருச்சபையை ஆதரித்த இவர் அரியணையில் அமர்ந்ததுமே பெந்தகோஸ்தே திருச்சபைக்கு கடும் எதிர்பை தெரிவித்தார். 

அந்த சமயம் John Rogers ரோம கத்தொலிக்க திருச்சபையை வெளிப்படையாக எதிர்க்க துவங்கினார். இதனால் அவர் சிறை பிடிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் 04 ஆம் தேதி 1555 ஆம் ஆண்டு மரத்தில் கட்டிவைத்து எறிக்கப்பட்டார். இராணி மேரியால் கொல்லப்பட்ட நூற்றுகணக்கானோரில் இவரே முதல் நபர். இவரின் கொலைக்கு பின்னர் இராணி மேரி Bloody Mary என்ற பட்ட பெயருடன் அழைக்கப்பட்டார்.

கி.பி 1560 ஆம் ஆண்டு லத்தின் வல்கேடில் இருந்தும் எபிரேயு, லத்தின் ஏடுகளில் இருந்தும் மொழிபெயர்க்கப்பட்டு Geneva Bible உருவாக்கப்பட்டது. இதுவே முதன் முறையாக வெளிவந்த பெந்தகோஸ்தே வேதாகமம் ஆகும். இதனை உருவாக்கியவர் John calvin என்றாலும் இதற்காக உழைத்த பெருமை ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த John Knox, Myles Coverdale, John Foxe மற்றும் Bloody Mary யின் கண்களில் சிக்காமல் தப்பித்த மேலும் சில ஆசிரியர்களையே சேறும். ஜெனிவா வேதாகமத்தின் 90% William Tyndale's வேதாகமத்தை ஒத்தவாறு காணப்படுகிறது. இந்த வேதாகமம் தான் அதிகாரங்கள், வசனங்கள் என தனித்தனியாக பிரித்து எண்கள் இடப்பட்ட முதல் வேதாகமம் ஆகும். இது ரோம அச்சு முறையில் ( Roman Style Typeface) அச்சிடப்பட்டது. 

இந்த வேதாகமத்திற்கு Breeches Bible என்ற மற்றொரு பெயரும் உண்டு. கிங்க் ஜேம்ஸ் வர்சன் வேதாகமம் வெளிவருவதற்கு முன்னால் சந்தையில் கிடைத்த ஒரே வேதாகமம் இது தான். பிற்காலத்தில் வெளிவந்த வேதாகமங்களின் 90% ஜெனிவா வேதாகமத்தை ஒத்தவாரே காணப்படுகிறது. இந்த கி.பி 1579 ஸ்காட்லாந்தில் (Scotland) வெளியிடப்பட்டது. கி.பி 1643 ஆம் ஆண்டு ஜெனிவா வேதாகமத்தை சிறிய வடிவில் Oliver Cromwell என்பவர் The soldier’s pocket Bible என்ற பெயரில் வெளியிட்டார். ஜெனிவா வேதாகமம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பாக இத்தாலி, லத்தின், ஸ்பானிஷ், பிரஞ்சு, யூதம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த வேதாகமத்தில் 140 க்கும் அதிகமான பதிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த வேதாகமத்தின் கடைசி பதிப்பு கி.பி 1644 ல் வெளிவந்தது.

கி.பி 1537 ல் The Coverdale Bible, The Matthew Tyndale Bible ஆகிய வேதாகமங்களுக்கு உரிமை வழங்கிய அரசர் எட்டாம் ஹென்றி (Henry VIII) அதன் பிறகு கி.பி 1538 ல் இங்கிலாந்தின் எல்லா தேவாலயங்களிலும் வேதாகமத்தின் ஆங்கில மொழி பெயர்பு கிடைக்கவும் தேவாலயங்களில் வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் உரிமை வழங்கினார். Myles Coverdale -ன் தலைமையில் கத்தொலிக்க திருச்சபையே வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கி.பி 1539 ஆம் ஆண்டு அச்சிட்டு The Great Bible என்ற பெயரில் வெளியிட்டது. அதற்கு அடுத்த ஆண்டே அதாவது 1540 ல் அதன் மறு பதிப்பும் அதன் பிறகு அடுத்தடுத்து ஐந்து பதிப்புகளும் அச்சிடப்பட்டன. இதற்கு இங்கிலாந்து நிர்வாகமே உரிமங்களை வழங்கியதால் அடுத்தடுத்து வேதாகமங்கள் வெளிவர இது அடிப்படையாக அமைந்தது. இந்த வேதாகம மொழிப்பெயர்பில் நிகழ்ந்த முக்கிய தவறு என்னவென்றால் அப்போகரிபா Apocrypha என்ற வார்தையை Hagiographa என்று மொழி பெயர்தது தான். Hagiographa என்ற வார்தைக்கு புனித குறிப்புகள் என்று பொருள்.

The Great Bible வெளிவந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கத்தொலிக்க ஆயர்கள் தாங்களே வேதாகமத்தை மொழி பெயர்க்க முன்வந்து முதலாம் எலிசபெத் இராணியின் ஆட்சிக்கு பிறகு ஆயர் Parker -ன் வழி நடத்தலின் கீழ் கி.பி 1568 ல் The Bishop’s Bible அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. கி.பி 1568 யில் இருந்து கி.பி 1606 ஆம் ஆண்டுக்கு இடைபட்ட 38 ஆண்டுகளில் சுமார் 19 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் புரோட்டஸ்டாண்டு கிறிஸ்தவர்கள் வேதாகமங்களை மொழி பெயர்த்து வெளியிட்டு கொண்டு இருக்க மறுபக்கம் அதற்கு போட்டியாக கத்தொலிக்க திருச்சபை வேதாகமங்களை மொழிபெயர்த்து வெளியிட்டு கொண்டிருந்த காலம் அது. இரு தரப்பினருமே தங்கள் வேதாகமத்தில் உள்ள குறைகளை சரி செய்ய மறு பதிப்புக்கு மேல் மறு பதிப்பாக வெளியிட்டு கொண்டு இருந்தனர். அதுநாள் வரை ரோம திருச்சபையானது லத்தின் வல்கேட்; (Latin Vulgate)  வேதாகமத்தையே திருத்தம் செய்து வெளியிட்டு கொண்டு இருந்தது. ஆனால் புரோட்டஸ்டாண்டு கிறிஸ்தவர்களோ எபிரேயு, கிரேக்க மூல ஏடுகளில் இருந்து வேதாகமத்தை மொழி பெயர்த்து கொண்டு இருந்தனர். இதனால் புரோட்டஸ்டாண்டு  வேதாகமங்களை விட கத்தொலிக்க வேதாகமங்கள் அதிக முறண்பாடுகளுடன் காணப்பட்டன. எனவே கத்தொலிக்க திருச்சபையின் இந்த குறைபாடுகளை கலைக்க ரெகிம்ஸ் (Rheims) நகரில் இருந்த ஒரு கல்லூரி மூலமாக கிரேக்க மூல ஏடுகளில் இருந்து புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்தனர். இந்த புதிய ஏற்பாடானது Rheims New Testament என்ற பெயரில் கத்தொலிக்க திருச்சபையால் வெளியிடப்பட்டது. அப்போது மூல மொழிகளில் இருந்து புதிய ஏற்பாட்டை மட்டும் தான் மொழி பெயர்த்தார்கள். பழைய ஏற்பாடானது அதன் பிறகு 38 ஆண்டுகள் கழித்து கி.பி 1609 ல் டூவே (Douay) என்ற நகரில் இருந்த ஒரு கல்லூரி மூலமாக மொழி பெயர்க்கப்பட்டு கி.பி 1610 ஆம் ஆண்டு Douay Old Testament என்ற பெயரில் கத்தொலிக்க திருச்சபையால் வெளியிடப்பட்டது.
எலிசபெத் இராணி (Queen Elizabeth I) மற்றும் நாலாம் இளவரசர் ஜேம்ஸ் (Prince James VI) இருவரின் மறைவிற்கு பின் முதலாம் ஜேம்ஸ் ஆட்சி பொறுப்பை ஏற்றார். இவர் கி.பி 1604 ஆம் ஆண்டு வேதாகமத்தில் திருத்தங்களை செய்து புதிய வேதாகமம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இவர் முயற்சியில் உருவானதுதான் The King James Bible (KJV). இது கி.பி 1611 யில் வெளியானது. இது Apocrypha புத்தகங்களையும் சேர்த்து 80 புத்தகங்கள் உள்ளடங்கியது. 

இந்த வேதாகமம் Pulpit Folio வடிவத்தில் உருவாக்கப்பட்டது. இதன் நீளம் 15-16 inches அகலம் 10-11 inches. இது நூறு சதவீதம் பருத்தியால் நெய்யப்பட்ட துணியில் அச்சிடப்பட்ட்து (100% rag cotton linen sheet). உலகில் அதிகமான மக்களால் பேசப்பட்டதும், உலகில் அதிகமாக விற்பனையானதும் இந்த வேதாகமம் தான். சுமார் 250 ஆண்டுகளுக்குள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான வேதாகமங்கள் விற்பனையானது.

Robert Aitken என்பவர் முதன் முறையாக அமேரிக்காவில் The King James Bible ஐ கி.பி 1782 ஆம் ஆண்டு அச்சிட்டு மிகவும் மலிவான விலைக்கு வெளியிட்டார். எனவே இந்த வேதாகமம் அவரது பெயரிலேயே கி.பி 1782 Robert Aitken’s  Bible என்று அழைக்கப்பட்டது. அவர் Apocrypha பகுதிகளை நீக்கிவிட்டு மீதமுள்ள 66 புத்தகங்களை மட்டுமே வெளியிட்டார்.

கி.பி 1792 யில் Isaac Collins மற்றும் Isaiah Thomas இருவரும் சேர்ந்து அமேரிக்காவில் முதன் முதலாக குடும்பத்துடன் படிப்பதற்கான படங்களுடன் கூடிய வேதாகமம் ஒன்றை வெளியிட்டனர். இந்த வேதாகமம் Apocrypha உடன் சேர்த்து 80 பகுதிகளை கொண்டது.

கி.பி 1808 யில் Robert Aitken யின் மகள் Jane Aitken ஒரு வேதாகமத்தை உருவாக்கி வெளியிட்டார். இது Jane Aitken's Bible  என்று அழைக்கப்படுகிறது. இதுவே முதன் முதலாக ஒரு பெண்ணால் வெளியிடப்பட்ட வேதாகமம் ஆகும்.  

இதன் பிறகு வெளிவந்த வேதாகமங்களை விளக்கமா விவரித்தால் இன்னும் பல பக்கங்கள் நீழும் என்பதால் தற்போது பயன்பாட்டில் உள்ள பிறபலமான வேதாகமங்களின் சுருக்கமாக பட்டியலை மட்டும் தருகிறோம். 

வேதாகமம் உருவான கதை பாகம் 7

No comments:

Post a Comment