வேதாகமம் உருவான கதை - பாகம் 4


கி.மு 400 ஆம் ஆண்டு முழு பழைய ஏற்பாடும் அராமக் மொழியில் தொகுக்கப்பட்டது. இந்த தொகுப்பிற்கு Aramaic targums  என்று பெயர். கி.மு 250 ல் பழைய ஏற்பாடானது கிரேக்க மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. இந்த வேதாகமத்திற்கு Septuagint என்று பெயர். இந்த பெயரை தமிழில் சொன்னால் எழுவது என்று சொல்லலாம். இந்த பெயரை வைக்க காரணம் என்ன தெரியுமா? ஏறக்குறைய எழுவது, ஏழுபத்து இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து முழு பழைய ஏற்பாட்டையும் கிரேக்க மொழிக்கு மொழி பெயற்கும் பணியில் ஈடுபட்டார்களாம் அதனால் அவர்களின் நினைவாக எழுவது என்றே பெயர் வைத்து விட்டார்கள். இதை ரோம எண்ணில் "LXX"  இப்படி தான் குறிப்பிடிகிறார்கள். அவர்கள் உருவாக்கிய இந்த பழைய ஏற்பாடு 29 ஆகமங்களையும் 14 அப்போகரிபா (Apocrypha) பகுதிகளையும் சேர்த்து மொத்தமாக 43 புத்தகங்களை கொண்டது. அப்போகரிபா (Apocrypha) பற்றி பின்னர் விவரமாக பார்க்கலாம்.
கி.பி 45 முதல் 63-க்கும் இடைபட்ட காலத்தில் தான் புதிய ஏற்பாட்டு சுவிஷேசங்களான மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் அப்போஸ்தலர் பணிகள் ஆகியவை முதன் முதலாக கிரேக்க மொழியில் எழுதபட்டிருக்கலாம் என வரலாற்று வல்லுநர்கள் கணித்து இருக்கிறார்கள். யோவான் மற்றும் வெளிபடுத்தின சுவிசேஷம் இவை இரண்டும் கி.பி 95-ல் யோவானால் கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை.
கி.பி முதலாம் நூற்றாண்டுக்கும் இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலங்களில் மத்தேயு, மாற்கு போன்ற ஏறாலமான ஆசிரியர்கள் இயேசுவின் வரலாற்றை எழுதியதாகவும் இவ்வாறு எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டு ஏடுகள் 5,600 க்கும் அதிகமாக இருந்ததாகவும் இவை பிற்காலத்தில்  கிறிஸ்தவ  மதகுருக்களால் அழிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளார்கள். அவர்களின் கூற்றில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது நமக்கு தெரியவில்லை என்றாலும் புதிய ஏற்பாட்டில் காணப்படும் கீழ் கண்ட வசனம் அவர்களின் கூற்று உண்மை என்பதை தெளிவுபடுத்துகிறது. 

மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் நம்புகிற சங்கதிகளை, ஒப்புவித்தப்டியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,
ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தரிந்து நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டிமென்று,
அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. (மாற்கு 1:4)
           
கி.பி 180-ல் கிரேக்க புதிய ஏற்பாடானது லத்தின் மற்றும் சைரியா மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டது. கி.பி. 195 -ல் தான் முதன் முதலாக பழைய, புதிய ஏற்பாடுகள் சேர்ந்த முதல் வேதாகமம் கிரேக்க மொழியில் இருந்து லத்தின் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது. கி.பி 300-ல் கிரேக்க புதிய ஏற்பாடு சைரிய மொழிக்கு மொழிபெயர்கப்பட்டது. இந்த வேதாகமம் 80 ஆகமங்களை கொண்டது. (39 பழைய ஏற்பாடு, 14 அப்போகரிபா, 27 புதிய ஏற்பாடு)


கி.பி 1380 -ல் ஆங்கில வேதாகமம் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் தியாலஜி பேராசிரியராக இருந்த John Wycliffe என்பவரால் மேலே சொன்ன அந்த லத்தீன் வல்கேட் பைபிளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது. இந்த ஜானுக்கு எபிரேயு, கிரேக்க மொழிகள் தெரியாது. அதனால் இவரால் மூல மொழிகளில் இருந்து ஒரு சரியான வேதாகமத்தை மொழி பெயர்க்க இயலவில்லை. இவர் மொழிபெயர்த்த காலங்களின் அச்சு இயந்திரமெல்லாம் கிடையாது. முழுவதையும் கையாலேயே எழுதி முடித்தார். அவருக்கு கை வலிக்கும் அல்லவா அதனாலோ என்னவோ அவரது நண்பர் Lollards என்பவரும் உதவியாளர் Purvey என்பவரும் அவருக்கு உதவி செய்தனர்.

ஆங்கில பெயர்களை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்து தமிழை கொலை செய்ய விரும்பாத்தால் ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன். முழு வேதாகமத்தையும் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்துவிட்டு ஒரு 44 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார். John Wycliffe மொழிபெயர்த்த இந்த வேதாகமமே உலகின் முதல் ஆங்கில வேதாகமம் ஆகும்.

அவர் இறந்த பிறகு அவரது பாதையை பின்பற்றிய ஜான் ஹியூஸ் (John hus) என்பவர் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த தாய் மொழியிலேயே வேதாகமத்தை படிக்க வேண்டும் என்ற புதிய முயற்சியில் ஈடுபட்டார். அந்த காலத்தில் லத்தின் மொழியே புனித மொழியாக கருதினர். வேதாகமத்தை வேறு மொழிகளில் மொழி பெயர்பதை அவர்கள் விரும்பவில்லை.

யாரேனும் வேதாகமம் படிக்க வேண்டுமென்றால் அவர் லத்தின் மொழி தெரிந்தால் மட்டும் படிக்க இயலும். அந்த காலத்தில் வாழ்ந்த எல்லா பாதிரியார்களுமே லத்தின் மொழி கற்று இருந்தனர். இங்கே கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் வேதாகமத்தின் மூல மொழிகள் எபிரேயு, அராமக், கிரேக்கம் ஆகிய மொழிகள் தானே தவிர லத்தீன் இல்லை. கி.பி. 1415 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் தேதி ரோம தேவாலய குருக்கள் அவரை மரத்தில் கட்டி தீ வைத்து எரித்து கொன்றனர். இன்னும் நூறு ஆண்டுகளில் இதே பணியை செய்ய கர்த்தர் வேறு ஒரு நபரை எழுப்புவார் அவரை உங்களால் எதுவும் செய்ய இயலாது இது தான் அவர் உயிர் பிரியும் முன்னர் கடைசியாய் சொன்ன வார்த்தைகள். 

கத்தொலிக்க திருச்சபை செய்கிற அநியாயங்களை தட்டி கேட்க ஒருவர் வரமாட்டாரா என ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களும் எதிர் பார்த்து இருந்த காலம் அது. ஜான் ஹியூஸ் சொன்ன தீர்க்க தரிசனம் பொய்யாகவில்லை. அவர் சொன்னபடியே  ஏறகுறைய நூறு ஆண்டுகளுக்கு பின் அதாவது அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி  1517 ஆம் ஆண்டு கருப்பு நிற அங்கியும் கருப்பு தொப்பியும் அணிந்து கொண்டு கையில் ஒரு காகிதத்தை எடுத்து கொண்டு Wittenberg நகரின் தேவாலயத்தை நோக்கி புறப்பட்டார் ஒரு மாமனிதர் அவர் திராவிட கலகத்தை சேர்ந்தவரோ என்று எண்ண வேண்டாம். ஜெர்மனிய இறையியல் பேராசிரியர் மார்டின் லூதர்கிங் தான் அவர். மறுநாள் விடிந்தால் புனிதர்கள் தினம் முதல் நாள் இரவு  கத்தொலிக்க திருச்சபையின் சுமார் 95 குறைபாடுகளை பட்டியலிட்டு தேவாலயத்தின் கதவின் மீது ஒட்டினார். இது உலகபுகழ் பெற்று திகழ்ந்த கத்தொலிக்க திருச்சபையின் மீது வாசிக்கப்பட்ட முதல் குற்றப்பத்திரிக்கை.
 
       வேதாகமம் உருவான கதை - பாகம் 5 யை காணவும்.
                  


1 comment:

  1. வேதாகமம் உருவான கதை -
    பாகம் 5
    eppa varum???

    ReplyDelete