முன்னுரை


நண்பர்களே,

எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்களோடு எப்போதும் இருப்பதாக. இந்த புத்தகமானது கிறிஸ்தவத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு எழுதபட்டதல்ல. உண்மையான ஏக இறைவனை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு சமயச் சுதந்திரத்திற்கான உரிமை சட்டம் (அரசியலமைப்புப் பிரிவு 25-28) இன் படி எழுதப்பட்டுள்ளது.

கிறிஸ்தவம் என்ற ஒரே போர்வைக்குள் இருந்தாலும் இன்றைய உலகில் கிறிஸ்தவமானது கொள்கைகளால் பல்வேறு துண்டுகளாக பிளவுபட்டு கிடக்கிறது. ஜூலை மாதம் 2012 ஆம் ஆண்டின் கணக்குப்படி உலக மக்கள் தொகையில் 2.1 பில்லியன் மக்கள் கிறிஸ்தவர்கள் அதாவது மக்கள் தொகையில் 33.35% கிறிஸ்தவர்களே என்ற போதும் இதில் Roman Catholic 16.83%, Protestant 6.08%, Orthodox 4.03%, Anglican 1.26% ஆகிய பிரிவுகள் அடங்கும்.

இது மட்டுமல்ல உலக அளவில் உள்ள பிரிவுகள் தான் இவை. இவையல்லாமல் சிறிய அளவில் எண்ணிக்கையில் அடங்காத பிரிவுகள் உள்ளன. இப்படி பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் அத்தனை பேரும் ஒருமித்த குரலில் சொல்லும் ஒரே வாசகம் எது தெரியுமா? இறைவன் எங்களுக்கு அளித்த வேதம் பரிசுத்த வேதாகமம் (Holy Bible) நாங்கள் வேதாகமத்தை மட்டுமே பின்பற்றுகிறோம் என்பதுதான்.

பரிசுத்த வேதாகமமானது இறைவனால் இறைதூதர்கள் வழியாக மனிதனுக்கு அருளப்பட்டது. இது முறண்பாடுகள் அற்றது, பரிசுத்தமானது, இதில் ஒரு எழுத்தில் கூட குறைகாண முடியாது என்பதுதான் இவர்களின் வாதம். வேதாகமத்தை எவன் பின்பற்றுகிறானோ அவனே நித்திய ஜீவனை அடைவான் என்பது ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை சரியானதா என்பதை அலசி ஆராய்ந்து ஒரு கிறிஸ்தவன் எழுதியதுதான் இந்த “வேதாகமத்தின் மறுபக்கம்”.

எங்களின் ஆராய்ச்சி குழு இணைய தளங்களின் உதவியுடனும் பல ஆன்மீகவாதிகளின் உதவியுடனும் வேதாகமத்தின் புனித்துவத்தை அலசி ஆராய துவங்கியது. கிடைத்த தகவல்கள் எங்களை அதிர்ச்சி அடைய செய்தது. வேதாகமத்தின் மீது எத்தனை குற்றசாட்டுகள்? விடை சொல்ல முடியாமல் எத்தனை வினாக்கள்?

விஞ்ஞானத்தோடு ஒத்து போகாத அறிவியல் முரண்பாடுகள், கணித முரண்பாடுகள், வரலாற்று முரண்பாடுகள், மொழி பெயர்ப்பு பிழைகள், வேற்று மதத்தவர்களால் திட்டமிட்டு புகுத்தப்பட்ட மூட பழக்கவழக்கங்கள், வேதாகமத்தில் நீக்கப்பட்ட சேர்க்கப்பட்ட செய்திகள்...... என்ற நீண்ட பட்டியலோடு எங்களது “வேதாகமத்தின் மறுபக்கம்” தொடரயிருக்கிறது

இங்கே முன் வைக்கப்படும் குற்றசாட்டுகளுக்கு தங்களால் விளக்கம் தர இயலுமானால் தங்களின் விளக்கத்திற்காக நாங்கள் காத்திருக்கிற்றோம்.

இந்த புத்தகத்தை எழுத ஊக்கம் அளித்து உதவி புரிந்த Khaja Nazmudeen அவர்களுக்கும் இந்த புத்தகத்திற்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் எங்களது நன்றிகள்.

எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இது தொடரும்...


No comments:

Post a Comment